வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தான் அரியாணா மாநில முதல்வராக பதவி வகித்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.


இந்நிலையில், தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது பொருளாதார அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த்தாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான டெல்லி பஞ்சகுலா மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்ட ரூபாய்ல 3.68 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.