வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் பேருந்தை அறிமுகம் செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் வால்வோ டிரக் நிறுவனங்கள் இணைந்து வி.இ. வணிக வாகனங்களை தயாரித்துள்ளன.


இந்த எலெக்ட்ரிக் பேருந்துகள், "ரெவல்லோ" மின்மாற்ற தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது.


இந்த "ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கைலைன் புரோ ஈ பேருந்துகள் இந்திய சாலைகள் மீது செல்ல சான்றிதழ் பெற்றுள்ளன, மேலும் பயணிகள், நகர போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புக்களும் பெரும் மதிப்பு அளிக்கும் என நாம் நம்புகிறோம்" என்று வி.ஏ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் அக்கர்வால் தெரிவித்தார்.


வி.ஏ. வணிக வாகனம் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இந்தூரில், எலெக்ட்ரிக் பேருந்துகள் தயாரிக்கப்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் உதவியோடு தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு குறைவான ஜி.எஸ்.டி. கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என்பதால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source(IANS)