புதுடெல்லி: ஹத்ராசில் (Hathras) ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தால் நாடே கொதித்துக் கொண்டிருக்கின்றது. பல ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில், மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பீகாரின் கதிஹாரில் (Katihar) நடந்துள்ளது. அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னைக் கிண்டல் செய்தவர்களை எதிர்த்ததால் கொடூரமாக தாக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் பலமுறை சிறுமியின் உடலின் மீது பைக்கை செலுத்தியதால், அப்பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன் எலும்புகளும் உடைந்தன.


சிறுமி பாட்னாவில் (Patna) உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்தார். அவர் 20 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ளார். எனினும் இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கிறார்.


இந்த சம்பவம் செப்டம்பர் 5 ஆம் தேதி முஃபாசிலின் சவுகான் டோலாவில் நடந்தது.


பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரத்தியேக உரையாடலில் ஜீ நியூஸ் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் இருவர் அவரது மாமாவின் மகன்கள் என்பதைக் கண்டுபிடித்தது.


"அவர்கள் இருவருக்கும் எப்போதுமே தவறான நோக்கங்கள் இருந்தன, நாங்கள் ஒன்றாக வெளியே செல்லும் போதெல்லாம், அவர்கள் எப்போதும் என்னுடன் ஏதாவது தவறு செய்ய முயற்சித்தார்கள்" என்று பாதிக்கப்பட்டவர் ஜீ நியூஸிடம் கூறினார்.


ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!


அவர் மேலும் கூறுகையில், "நான் ஆசிரியர் தினத்தன்று சந்தையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் (துர்கா சவுகான் மற்றும் போலா பாஸ்வான்) இருவரும் தங்கள் பைக்கை என் மீது இடித்தனர். என்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றனர். நான் அதை தொடர்ந்து எதிர்த்தேன்." என்றார்.


"கிராமவாசிகள் என்னை சிகிச்சைக்கு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், நான் சிர்சாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டேன். பின்னர் பாட்னாவுக்கு பரிந்துரைக்கப்பட்டேன். அங்கு பாட்னா காவல்துறை எனது அறிக்கையை பதிவு செய்தது."


"மூன்று பேர் இருந்தனர், அவர்கள் தலைமறைவாக உள்ளனர். சம்பவம் நடந்ததிலிருந்து நான் பலவீனமாகிவிட்டேன். என் காலில் ஒரு எஃகு கம்பி பொறுத்தப்பட்டுள்ளது. என் எலும்புகள் மற்றும் தாடை உடைக்கப்பட்டுள்ளன."


"தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள் நிதீஷ் 'சாச்சா'" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.


பாதிக்கப்பட்டவரின் தந்தையுடன் ஜீ நியூஸ் பேசியது. அவர் தனது மகளின் சிகிச்சையில் 8 லட்சத்திற்கும் அதிகமாக செலவாகி விட்டது என்றார்.


"அவரது அறிக்கை பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் 72 மணி நேரத்திற்குள் புகாரை கதிஹார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். ஆனால் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை" என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறினார்.


கதிஹார் துணை போலீஸ் சூப்பிரண்டு அமர் காந்த் ஜா இந்த செய்தியை உறுதிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் சிகிச்சைக்காக சென்றதாகவும் கூறினார்.


"நாங்கள் பாட்னாவிடமிருந்து அறிக்கையைப் பெற்றோம். இந்த வழக்கின் விசாரணை புகாரின் அடிப்படையில் தொடர்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான போலா ஏற்கனவே பல குற்றங்களைச் செய்தவன். மேலும் சில நாட்களுக்கு முன்பு ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று எஸ்.டி.பி.ஓ. ஜா கூறினார்.


"மற்ற இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று ஜா தெரிவித்தார். 


ALSO READ: Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR