காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மகாலினை பராமரிக்க மறுக்கும் உத்திரபிரதேச அரசினை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பராமரிப்பு அற்ற நிலையில் இருக்கும் தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவிட்டால் தாஜ்மகாலினை இடித்து விடுங்கள் என்று உத்திரபிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 


சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் மதன் பி லோகர் மற்றும் தீபக் கொண்ட அமர்வு இதனை தெரிவித்துள்ளனர்.


ஈபல் டவரினை விட அழகாக இருக்கும் தாஜ்மகால் என குறிப்பிட்ட நீதிபதிகள், ஈபல் டவரில் ஏற்பட்ட பிரச்சனைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்கு மீட்டு வரும் நிலையில் அதுப்போல் ஏன் தாஜ்மகாலினை நம் நாட்டு அரசுகள் பாதுகாக்க மறுக்கின்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


முன்னதாக தாஜ்மகால் பாதுகாப்பது குறித்த விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


ஆனால் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தாஜ்மகாலை பாதுகாக்க விருப்பம் இல்லாவிட்டால் அதனை இடித்து விடுங்கள் என்று அரசு நிர்வாகத்தினை கண்டித்துள்ளனர்.


மேலும், இந்தியாவின் நினைவுச் சின்னமான தாஜ்மகால் மாசுபட காரணம் என்ன, அதனை தடுப்பது எவ்வாறு என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வரும் 31-ஆம் நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.