மும்பை: பெற்றோரை சரியாக கவனிக்க தவறும் பிள்ளைகளிடன் இருந்து சொத்துக்களை திரும்பப் பெறலாம் என மும்மை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் அந்தேரியைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் மனைவி கடந்த 2014-ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய விரும்பியதாகவும், அப்போது மகன் மற்றும் மறுமகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் தனது குடியிருப்பில் 50% மகனுக்கு எழுதிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் அவரது மகன் அவரையும் அவரது இரண்டாவது மனைவியையும் தொடர்ந்து அவமானப்படுத்தியும் கொடுமைப்படுத்தியும் வந்ததாகக் தெரிகிறது.


இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரந்த முதியவரின் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ரன்ஜித் மோர் மற்றும் அனுஜா பிரபு தேசாய் கொண்ட அமர்வு, முதியவர்கள் பாதுகாப்புச் சட்ட2007-னை சுட்டிக்காட்டி.. மகன் முறையாகக் கவனிக்கத் தவறும் பட்சத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுத்த சொத்தை திரும்பப்பெற உரிமையுண்டு என்று கூறி மகனுக்கு முதியவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தனர். 


இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதியவரின் மனைவி கடந்த 2014-ஆம் ஆண்டு இறந்துள்ளார். இதனையடுத்து அவர் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது குறப்பிடத்தக்ககது.