Congress Candidate List, Odisha Election 2024: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் ஒரிசா சட்டமன்றத் தேர்தல்களுக்கான புதிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று (ஏப்ரல் 28) இரவு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 2 மக்களவை மற்றும் 8 சட்டமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இந்த பட்டியலில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேபரேலி மற்றும் அமேதி தொடர்பான இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எடுப்பார் என கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


ஒடிசா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்


ஒடிசாவின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் நாகேந்திர பிரதான் மற்றும் கட்டாக் மக்களவைத் தொகுதியில் சுரேஷ் மகாபத்ராவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது.


ஒடிசா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்


முன்னாள் எம்எல்ஏ தேபி பிரசாத் சந்த் ஜலேஷ்வர் சட்டமன்ற தொகுதியிலும், மோனாலிசா லெங்கா பாலசோர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இம்முறை பாதல் ஹெம்ப்ராமுக்குப் பதிலாக பரிபாடா சட்டமன்ற தொகுதியில் பிரமோத் குமாரை கட்சி நிறுத்தியுள்ளது. பரச்சனா சட்டமன்ற தொகுதியில் அஜய் சமலும், பல்ஹாரா சட்டமன்ற தொகுதியில் ஃபகிர் சமலும், ஜகத்சிங்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரதிமா மாலிக், கந்தபாரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து மனோஜ் குமார் பிரதானை நீக்கிய கட்சி, பைஜெயந்திமாலா மொகந்தியைத் வேட்பாளராக நிறுததி உள்ளது.



மேலும் படிக்க - 'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்


ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள்


ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் ஒரே நேரத்தில் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் மே 13 ஆம் தேதியும், 2வது கட்டம் மே 20 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் மே 25 ஆம் தேதியும், கடைசி கட்டம் ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும்.


ஒடிசா சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை


ஒடிசாவில் 147 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தேர்தலுக்கு இதுவரை 142 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) ஆகிய இருகட்சிகளுக்கும் இரு சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஒதுக்கியுள்ளது.


2019 லோக்சபா தேர்தல் ஒடிசா


2019 லோக்சபா தேர்தலில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அதிகபட்சமாக 12 இடங்களையும், பிஜேபி 8 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது.


மேலும் படிக்க - 'பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்' - ராகுல் காந்தி கணிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ