நவ.12 முதல் டிச.7 வரை தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை!
வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் வெளியிட்டார். இத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்க நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
> சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12-ம் தேதியும், 20-ம் தேதியும் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
> மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28-ம் தேதி வாக்குப் பதிவும்,
> ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி வாக்குப் பதிவும் நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(ஏ)ன்படி, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக எந்தவிதமான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை செய்யப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 126(1)(பி)ன்படி, தேர்தல் தொடர்பாக எந்தவிதமான காட்சிகளையும் வெளிப்படுத்துவது, கருத்துகளை ஒளிபரப்புவது, ஆய்வுகளை சேனல்களில் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.