27 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற விவகாரத்தில் அரசியல் கட்சிகள் சில ஆதரவும், சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 


இந்நிலையில், வருகின்ற 27-ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநிலக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.


இக்கூட்டத்தின் போது, தேர்தல் நாளுக்கு, 48 மணி நேரத்துக்கு முன்பு இருந்து, அச்சு ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் அரசியல் விளம்பரம் செய்ய தடை விதிப்பது குறித்து கருத்து கேட்கப்படவுள்ளது. அத்துடன், 48 மணி நேரத்துக்கு முன்பு, சமூக ஊடகங்கள், வலைதளங்களிலும் வேட்பாளர் குறித்த விளம்பரத்தை தடுக்கவும் பரிசீலிக்கப்படவுள்ளது.  


மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. இக்கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சைகள் குறித்து, எதிக்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.