அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது செலவிட்டு வாங்கும் பொருட்களுக்கான விலைப்பட்டியலை நிர்ணயித்து தேர்தல் ஆணையம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இதே போல சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளக்கூடிய செலவுகளைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மட்டன் பிரியாணி 200 ரூபாய் என்றும் சிக்கன் பிரியாணி 180 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல காலை உணவிற்கு 100 ரூபாய் என்றும் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என்றும் தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது.


விலைப் பட்டியல்:


தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பிரமுகர்களுக்கு வேட்பாளர் வழங்கும் மட்டன் பிரியாணி 200 ரூபாய் என்றும் சிக்கன் பிரியாணி 180 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை உணவிற்கு 100 ரூபாயும், தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது. 


மட்டன் பிரியாணி - ரூ. 200 ரூ 
சிக்கன் பிரியாணி - ரூ. 180
காலை உணவு - ரூ. 100
வெஜிடபிள் பிரியாணி - ரூ. 100
மதிய உணவு - ரூ 100
குளிர்பானங்கள்- ரூ. 75
இளநீர் - ரூ. 40
தண்ணீர் - ரூ. 20 / 1 லி 
பொன்னாடை - ரூ. 150
பூ - ரூ. 60
புடவை (பூனம்) - ரூ. 200
டீ சர்ட் - ரூ. 175
தொப்பி - ரூ. 50
பிளிச்சிங் பவுடர் - ரூ. 90
பூசணிக்காய் - ரூ. 120
வாழைமரம் - ரூ 700
தொழிலாளர் செலவு (8 மணி நேரத்திற்கு) - ரூ. 450 
ஓட்டுனர்கள் (8 மணி நேரத்திற்கு) - ரூ. 695 
பட்டாசு - ரூ. 600
டிரம்ஸ் (4 மணிநேரம்) - ரூ. 4,500
மண்டபம் - ரூ. 2000 முதல் ரூ. 6000 வரை 
ஏசி அறைகள் (5 star) - ரூ 9,300 + வரி 
ஏசி அறைகள் (3 stars) - ரூ. 5,800 + வரி


இதனிடையே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக்கூட்டங்களால் பெரும் இடையூறு என அமைப்புகள், மக்கள் குழுக்களிடம் இருந்து முறையீடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை தவிர்க்கவும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குடிநீர், முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகளில் உயிர் ஆபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.