உத்தரகாண்ட், கோவா சட்டசபை தேர்தல்களில் இன்று ஒரே கட்டமாகவும் உத்தரபிரதேசத்தில்,  இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2000ம் ஆண்டு உத்தரகாண்ட்  மாநிலம் உருவான பிறகு, அமமநிலத்தில் நடக்கும் 5வது தேர்தல் இதுவாகும். அங்குள்ள 13 மாவட்டங்களில் மொத்தம் 70 தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலத்தின் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க, 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


 


மொத்தம் 40 தொகுதிகள் உள்ள கோவா மாநிலத்திலும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 301 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 68 சுயேச்சைகளும் அதில் அடங்குவர்.  11 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வார்கள். 


மேலும் படிக்க | உலக வானொலி தினத்தில் ‘மக்களை இணைக்கும் அற்புதமான ஊடகம்’ என பிரதமர் வாழ்த்து


நாட்டிலேயே அதிக இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன.  மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், இதன் முதல் கட்டமாக கடந்த 10ம் தேதி 58 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. அதில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து இன்று பிப்ரவரி 14ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. சஹாரான்பூர், மொரொதாபாத், பரேலி,  அம்ரோஹா, சம்பல், புதான், ராம்பூர், பிஜ்னோர், ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மேலும் படிக்க | PF New Rules: ஏப்ரல் 1 முதல், PF கணக்கில் பெரிய மாற்றம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR