மாநிலங்களவையில் 11 காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியீடு..!!!
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடைகிறது.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடைகிறது.
உத்திரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எல்.புனியா, ஹர்தீப் சிங் பூரி, ரவி பிரகாஷ் வர்மா, ராஜாராம்,டாக்டர் சந்திரபால் சிங் யாதவ், ஜாவேத் அலி கான், அருண் சிங், நீரஜ் சேகர், ராம்கோபால் யாதவ், வீர் சிங் ஆகியோரின் பதவி காலங்களும் உத்திரகாண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ் பாப்பர் ஆகியோரின் பதவிக்காலமும் நிறைவடைவதை ஒட்டி, இந்த இடங்களுக்காக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
தேர்தலுக்கான அறிவிக்கைகளை, தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் 20 அன்று வெளியிடும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 27ம் தேதியாகும்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள், அக்டோபர் 28 அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 2020, நவம்பர் 2ம் தேதி.
2020 நவம்பர் 9 அன்று தேர்தல் நடைபெற்று, அன்று மாலை 5 மணி அளவில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் நடைமுறை 11 நவம்பருக்குள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe