தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!!

பாஜக தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில், அதன் தலைவர் திரு.எல். முருகன், மிக அமைதியாக இருந்தார். ஆனால், போக போக, அடித்து ஆட ஆரம்பித்து விட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2020, 11:17 AM IST
  • பாஜக தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில், அதன் தலைவர் திரு.எல். முருகன், மிக அமைதியாக இருந்தார். ஆனால், போக போக, அடித்து ஆட ஆரம்பித்து விட்டார்.
  • நேற்று வரை நோட்டாவை தாண்டாத கட்சி என எள்ளி நகையாடிய கட்சிகள், உண்மையில் அண்ணாமலை, குஷ்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளாக கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • காளையார் கோயிலில் திமுகவில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், விலகி முன்னாள் காளையார் கோயில்ஒன்றியத்தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமையில் பாஜவில் இணைந்தனர்.
தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!! title=

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழக அரசியல் களம் இப்போது பாஜகவையே சுற்றி வருகிறது.  பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கான ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்திரராஜன் அடிக்கடி கூறும், “தாமரை மலர்ந்தே தீரும்” என்ற வாக்கு விரைவில் நிஜமாகி விடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

பாஜக (BJP) தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில், அதன் தலைவர் திரு.எல். முருகன், மிக அமைதியாக இருந்தார். ஆனால், போக போக, அடித்து ஆட ஆரம்பித்து விட்டார். 

பாஜக தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பது தமிழகத்தை பொறுத்தவரை கூடுதல் பலம். ஏனென்றால், சமூக நீதியை காப்பதாக காலம் காலமாக கூறி வரும் கட்சிகளில் பட்டியல் இனத்தவருக்கு, அதிகாரங்கள் வழங்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில், சமூக நீதியை காப்பதாக சொல்லும் கட்சிகள், பிற்படுத்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினத்தவரையும், வாக்கு வங்கிகளாகத்தான் வைத்துள்ளனரே தவிர, தங்களின் உண்மையான முன்னேற்றத்திற்கோ அல்லது தங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கோ உதவுதில்லை என்ற உண்மையை மக்கள் சிறிது சிறிதாக உணர்கின்றனர்.

ALSO READ |தேர்தலுக்காக திமுக கையில் எடுக்கும் இந்தி எதிர்ப்பு உத்தி... கை கொடுக்குமா... காலை வாருமா...!!!

பாஜக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதை, நேற்று, குஷ்பூ அவர்கள், பாஜவில் இணைந்ததை டிவி ஊடகங்கள் தொடர்ந்து நேரிடையாக வெளியிட்டதில் இருந்தே, அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். 

நேற்று வரை நோட்டாவை தாண்டாத கட்சி என எள்ளி நகையாடிய கட்சிகள், உண்மையில் அண்ணாமலை, குஷ்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளாக கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தவிர, சிறிது நாட்களுக்கு முன்பாக காளையார் கோயிலில் திமுகவில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், விலகி  முன்னாள் காளையார் கோயில்ஒன்றியத்தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமையில் பாஜவில் இணைந்தனர். இதுவும் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், தமிழக மக்கள் எப்போதும் ஜெயிக்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள். 

அதனால், ஒரு கட்சி ஜெயிக்க வேண்டும் என்றால், அது தான் வலுவான சக்தியாக உள்ளது, தங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதை மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். கட்சிக்கு ஆதரவு கூடும் போது தொண்டர்கள் உற்சாகம் ஏற்படுகிறது

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் வருகை கட்சித் தொண்டர்களிடயே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

தனது கட்சியும் ஒரு நாள் ஆட்சி பீடத்தில் ஏறும் என்ற உணர்வு தான் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை சினிமா ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதி முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா என சினிமாவில் இருந்து வந்து அரசியலில் கோலோச்சியது இதற்கு சிறந்த உதாரணம்.

தமிழகம் குஷ்பூவிற்கு கோயில் கட்டிய மக்களை கொண்ட மாநிலம் என்பதையும் மறந்து விட முடியாது.

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் வரும் போது, இது நாள் வரை பாஜகவை விமர்சனம் செய்தவர்கள், பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதையே உணர்த்துகிறது.

இது பாஜகவை பொறுத்தவரை கூடுதல் பலம். ஏனென்றால், அவர்களுக்கு இழக்க எதுவும் இல்லை. 

அரசியல் என்பது பொதுவெளி. இங்கே கட்சித் தாவல் ஒன்றும் புதிதல்ல, அதற்கு பல எடுத்துகாட்டுகள் உண்டு.

Dr H V ஹண்டே அவர்கள் அதிமுகவில் MGR மற்றும் ஜெயலலிதா தலைமையில் பணியாற்றியவர். MGR முதல்வராக இருந்தபோது சுகாதார அமைச்சராக இருந்தவர். அவர் பின்னாளில் பாஜக -வில் இணைந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த திரு.வைகோ, திமுகவில் பெரிய சக்தியாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்ட போது, 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தப்பட்டு, திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். ஆனால், இப்போது திமுகவுடன் நெருங்கி உறவாடிக் கொண்டு, தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவேன் என இறங்கியுள்ளார்.

அதனால், அரசியலை பொறுத்தவரை, நிரந்திர எதிரியும் அல்ல, நிரந்திர பகைவனும் அல்ல.

ஒருன் காலத்தில் கங்கிரஸை கடுமையாக எதிர்த்த திமுக தலைவர் கருணாநிதி,  பின்னாளில் இந்திரவே வருக, நிலையான ஆட்சி தருக என வரவேற்றார்.

இப்போது தீண்டதகாத கட்சி என ஒதுக்கி வைத்துள்ள பாஜகவுடன் ஒரு காலத்தில் கூட்டணி வைத்திருந்திருந்தார். 

எனவே அரசியலில், கவுண்டமணி ஸ்டைலில் கூற வேண்டும் என்றால், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. எனலாம். 

சிறிது நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவரான, திமுக பிரமுகர் மோகன் ராஜ் என்பவர்,  ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்மணியை, தரையில் உட்கார வைத்து கூட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான புகைப்படம் வைராலான பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை சமூக நீதியை காக்கிறோம் என சொல்லும் திமுக குரல் கொடுக்கவில்லை. தலித் மக்களின் காவலர் என கூறிக் கொள்ளும் தொல். திருமாவளவன் தோழமை சுட்டவில்லை.

பாஜகவினர் அவரை சென்று பார்த்து, அவருக்கு ஆதரவு அளித்து, அவருக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்துள்ளனர். 

எனவே, சமூக நீதியை நடைமுறையில் கடைபிடிப்பது பாஜக தான் என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

குஷ்பூ தவிர இன்னும் பாஜவில் பல அதிரடிகள் காத்திருப்பதாக கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... வரும் காலம்  பாஜகவின் ப்ரேக்கிங் நியூஸ்களால், சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

இவை ஓட்டுக்களை கொண்டு வருமா.. தமிழிசை கூறியபடி தாமரை மலர்ந்தே தீருமா என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.

Trending News