EMI Hike: வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன்கள் அதிகரிக்கும்! ரெப்போ ரேட் உயர்ந்தது
RBI Increased Repo Rate: 2018 ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் மிக அதிக அளவிலான ரெப்போ விகிதம் தற்போது நிலவுகிறது. இன்று, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்
நியூடெல்லி: 2018 ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் மிக அதிக அளவிலான ரெப்போ விகிதம் தற்போது நிலவுகிறது. இன்று, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதன் எதிரொலி நடுத்தர வர்க்கத்தினரின் மத்தியில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், கடன் வாங்கி அதற்கு மாதந்திர தவணைத்தொகை (EMI) கட்டுபவர்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இன்று, ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் வட்டி விகிதம் 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, எம்பிசியின் பரிந்துரையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2022ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி 0.4 சதவீதமும், ஜூன் 8ஆம் தேதி 0.5 சதவீதமும், ஆகஸ்ட் 5ஆம் தேதி 0.5 சதவீதமும், செப்டம்பர் 30ஆம் தேதி 0.5 சதவீதமும் உயர்த்தியது. கடண்ட்க்ஹ மே மாதம், மத்திய வங்கியில் இருந்து திடீரென வட்டி விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டது.
ரெப்போ ரேட்
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கியால் எந்த வங்கிக்கும் கடன் கொடுப்பதற்கான வட்டி விகிதமாகும். இதன் அடிப்படையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன
இந்த நிதியாண்டில் ஆறாவது முறையாக ரெப்போ விகிதம் அதிகரிப்பு
இன்றைய அதிகரிப்புக்குப் பிறகு ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாணயக் கொள்கையின் 6 உறுப்பினர்களில் 4 பேர் ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதற்கு ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (2023 பிப்ரவரி 8, புதன்கிழமை) ஆறு பேர் கொண்ட விகித நிர்ணயக் குழுவின் முடிவை ரிசர்வ் வங்கி கவர்னர் அதிகரித்தார்.
புதிய நாணயக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
RBI உயர்வு ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது
பணவீக்கம் 4 சதவீதம்
FY24இன் உண்மையான GDP வளர்ச்சி 6.4 சதவீதம்
FY24 இல் பணவீக்கம் 5.3% என மதிப்பிடப்பட்டுள்ளது, உண்மையான GDP வளர்ச்சி 6.4% ஆக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகித உயர்வால் கடன்கள் விலை உயர்ந்ததாக மாறும்.
வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றின் இஎம்ஐகள் அதிகரிக்கும்
மேலும் படிக்க | வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்புகள்
2024 நிதியாண்டில் MPC விழிப்புடன் இருக்கும் மற்றும் தரவு சார்ந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கு UPI வசதி கிடைக்கும்:
ஆகஸ்ட் 1, 2018க்குப் பிறகு ரெப்போ விகிதம் அதிகபட்சம்
கடனுக்கான அபராதக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மைக்கான விதிகளைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது
பைலட் திட்டமாக 12 நகரங்களில் நாணயம் வழங்கும் இயந்திரங்களை ரிசர்வ் வங்கி அமைக்கும்
எஃப்பிஐ முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன
டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிடும்
பணவியல் கொள்கை பரிமாற்றம் முன்னெப்போதையும் விட வலிமையானது
நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 5.9 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
மேலும் படிக்க | இனி ஆதார் கார்ட் மூலம் உங்கள் பேங்க் பேலன்சை தெரிந்து கொள்ளலாம்!
பத்திரச் சந்தைக்கான நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்
நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் CAD 3.3% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Q1 FY24க்கான GDP வளர்ச்சி கணிப்பு 7.1 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
பொருளாதாரம் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Q1 FY24 இல் GDP வளர்ச்சி 7.8% சாத்தியம்
24 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதம் சாத்தியம்
மேலும் படிக்க | RBI Monetary Policy: இனி எல்லா பொருட்களின் விலையும் கூடும்! ரெப்போ ரேட் அதிகரித்தது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ