வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க

IRCTC: ஏற்கனவே, பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் உள்ளது. இப்போது மற்றொரு புதிய வசதியை ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2023, 10:19 AM IST
  • வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.
  • ரயில் பயணிகளுக்காக புதிய சேவையை அறிவித்த IRCTC.
  • இனி நீங்கள் IRCTC ஆப் டவுண்லோட் செய்ய தேவையில்லை.
வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க title=

ரயிலில் வாட்ஸ்அப் உணவு ஆர்டர்: பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது பல புதிய சேவைகள் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், உணவுப் பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே, பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் உள்ளது நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. எனவே நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் பயன் தரும்.

வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்ய முடியும்
இ-கேட்டரிங் சேவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரயில்வேயால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவு ஆர்டர் செய்ய ரயில்வேயில் வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே தனது இ-கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு IRCTC மூலம் வழங்குகிறது. எனவே பயணிகள் இந்த இ-கேட்டரிங் சேவை மூலம் தங்களின் உணவை வாட்ஸ்அப் தொடர்பு சேவை மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்காக பிசினஸ் வாட்ஸ்அப் எண் +91-8750001323 பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தினம் ரூ.166 முதலீட்டை 16 லட்சமாக பெருக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

ஆப் டவுண்லோட் செய்ய இனி தேவையில்லை
முதற்கட்டமாக, வாட்ஸ்அப் தொடர்பு மூலம் இ-கேட்டரிங் சேவையை வழங்க ரயில்வே இரண்டு கட்டங்களை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில், www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு இ-கேட்டரிங் சேவையைத் தேர்ந்தெடுக்க பிசினஸ் வாட்ஸ்அப் எண் செய்தியை அனுப்பும். இந்த விருப்பத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் IRCTC இன் இ-கேட்டரிங் இணையதளம் மூலம் நிலையங்களில் கிடைக்கும் உணவகங்களில் இருந்து உணவை முன்பதிவு செய்ய முடியும். அதே நேரத்தில் இனி வாட்ஸ்அப்பில் உணவுகளை ஆர்டர் செய்ய நீங்கள் IRCTC செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை.

வாட்ஸ்அப் தொடர்பு சேவையின் இரண்டாம் கட்டத்தில், வாட்ஸ்அப் எண் வாடிக்கையாளருக்கு இருவழி தொடர்பு தளமாக மாறும். இதில், AI பவர் சாட்போட் பயணிகளின் இ-கேட்டரிங் சேவை தொடர்பான அனைத்து வகையான கேள்விகளையும் எடுக்கும் மற்றும் பயணிகளுக்கான உணவையும் முன்பதிவு செய்யும். தற்போது தேர்வு செய்யப்பட்ட சில ரயில்களில் மட்டும் வாட்ஸ்அப் தொடர்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் மற்ற ரயில்களிலும் வாட்ஸ்அப் தொடர்பு முறை அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பான் - ஆதார் அட்டையை இணைக்க கடைசி தேதி அறிவிப்பு... அதுவும் அபராதத்துடன்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News