உணவத்தில் வாலிபர் சடலம்; அதிர்ச்சியில் பொது மக்கள்!
மேற்குவங்க வாலிபர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு உணவத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
தானே: மேற்குவங்க வாலிபர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு உணவத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
மஹாராஸ்டிராவின் தானேவில், பிரபல உணவகம் ஒன்றில் வாலிபரின் உடல் சடமாக மீட்கப்பட்டுள்ளது. இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், அதே உணவகத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னதாக பணிபுரிந்தார் எனவும், பின்னர் அதேப்பகுதியில் இருக்கும் மற்றொரு உணவகத்தில் பணிக்கு சேர்ந்தார் எனவும் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தானேவின் குப்ரபவாடி பகுதியில் இருக்கும் இந்த உணவக்கித்தில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் குறித்து இன்று காலை உணவக ஊழியர்கள் பார்த்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிரா உதவியுடன் காவல்துறையினர் விசாரனையினை துவங்குயுள்ளனர்.
CCTV பதிவுகளின் படி மர்ம நபர் ஒருவர் காலை 4 மணியளவில் சமையலறையில் இறந்த வாலிபரின் உடலை வீசி சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சிகளின் உதவியோடு மர்ம நபரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக IPC பிரிவு 302-ன் கீழ் வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர், மீட்கப்பட்ட சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.