இட ஒதுக்கீடு ரத்து: உ.பி., முதல்வரின் அடுத்த அதிரடி
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாட்டிறைச்சிக்குத் தடை, பெண்களை கேலி செய்வோரை பிடிக்க தனிப்படை, பள்ளிகளில் கட்டாய யோகா என பல்வேறு அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில் மாநில மேம்பாட்டு மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.