புதுடெல்லி: இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. நாளையும் (புதன்கிழமை) சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறையிடம் சோனியா காந்தி வாக்குமூலம் பதிவு செய்தார். முதல் சுற்றில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, சோனியா காந்தி மீண்டும் அமலாக்க துறை அலுவலகத்தை அடைந்தார். அதன் பிறகு அவரிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று காலை 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது. அவர் தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ராவுடன் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் காலை 11 மணியளவில் மத்திய டெல்லியின் ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள வித்யுத் லேனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை அடைந்தார். அதன் பிறகு பிரியங்கா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தங்கியிருந்த நிலையில், ராகுல் காந்தி அங்கிருந்து உடனடியாக கிளம்பி, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள விஜய் சௌக்கில் நடந்த போராட்டத்திற்கு ராகுல் தலைமை தாங்கினார். அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.


மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி


நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மணிக்கணக்கில் விசாரணை நடத்தியது. ஆனால், இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது பல தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்கள் பின்னர் கைவிடப்பட்டனர். 



இந்நிலையில், இன்று சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையின் விசாரணை முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. சோனியாவிடம் நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ