இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி

Rahul Gandhi Arrested : டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கைது. உண்மைதான் இந்த சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி ட்வீட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 26, 2022, 03:03 PM IST
  • உங்கள் சர்வாதிகாரத்திற்கு உண்மை தான் முடிவு கட்டும்
  • உங்களால் ஒருபோதும் எங்களை அமைதிப்படுத்த முடியாது.
  • நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை பேரணி
இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி title=

புது டெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அப்பொழுது மத்திய பாஜக அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்த அவர், உங்கள் சர்வாதிகாரத்திற்கு உண்மை தான் முடிவு கட்டும் என்றார். அவருடன் சேர்ந்து 18 காங்கிரஸ் எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்று நாடு முழுவதும் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், "சர்வாதிகாரத்தைப் பாருங்கள், அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி விவாதிக்க முடியாது. காவல்துறை மற்றும் ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், எங்களை கைது செய்தாலும், உங்களால் ஒருபோதும் எங்களை அமைதிப்படுத்த முடியாது. 'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க: விமர்சிக்க வார்த்தைகள் தேவையில்லை, உங்கள் பெயரே போதும் : மத்திய அரசை சாடிய எதிர்க்கட்சிகள்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய நிறுவனங்களை தவறாக பயன்படுத்துதல், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்காததையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஒரு குறிப்பாணை கொடுக்க முன்னோக்கி நகர்ந்தபோது, ​​டெல்லி போலீசார் அவர்களை விஜய் சவுக் அருகே நடுவழியில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விஜய் சவுக் முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், பதாகைகளை ஏந்தியபடி, விசாரணை அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அங்கு துணை ராணுவம், விரைவு அதிரடிப்படை உள்ளிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மறுபுறம், நேஷனல் ஹெரால்டு வழக்கில், அவரது தாயும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இரண்டாவது கட்ட விசாரணைக்காக அமலாக்க இயக்குனரகத்திற்கு இன்று அழைக்கப்பட்டார். சோனியா காந்தி தனது மகள் பிரியங்கா காந்தியுடன் விசாரணை முகமை அலுவலகத்திற்கு சென்றார். ராகுல் காந்தியும் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அங்கு சென்றார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்படலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News