மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்; ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தாவே இன்று டெல்லியில் மரணம் அடைந்தார்.
இவர் 1956-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்தார். இளைமை காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, பாஜனதாவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக உள்ளார்.
மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இதனால் இன்று காலை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை எடுத்து சென்றனர். ஆனால் அவர் இன்று காலமானார். 60 வயதான மாதவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியது:
என்னுடைய நெருங்கிய நண்பரும், மிகவும் நெருங்கிய சக ஊழியரும், மிகவும் மதிப்பிற்குரிய ஒருவரான அனில் மாதவ் தவே திடீரென காலமானார் என செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னுடையை இரங்கலை தெரிவிக்கிறேன். அனில் மாதவ் தவே ஜி ஒரு அர்ப்பணிக்கப்பட்ட பொது ஊழியராக நினைவில் இருப்பார். அனில் மாதவ் தவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருடைய இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும் என தெரிவித்து உள்ளார்.