சிரியா பிரச்சணை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபலம்!
தற்போது இணையத்தில் பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் சிரியா பிரச்சணை தான்!
தற்போது இணையத்தில் பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் சிரியா பிரச்சணை தான்!
பிரபலங்கள் பலரும் சிரியா பிரச்சணை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் மூலமும், முகப்புத்தகம் மூலமும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகை ஈஷா குப்தாவும் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டுக்கு பொதுமக்கள் பலரும் அவரை பதில்கேள்வி கேட்டு வருகின்றனர். பிரபலங்களாக இருந்தும் வெறும் இணையப் பக்கங்களில் மட்டும் தங்களது போராட்டத்தினை நடத்தி வருகின்றனர் என்ற ஆதங்கமே இந்த பதில்கேள்விகளில் தெரிகிறது.
பொதுமக்களின் இந்த கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் தவித்து வருகின்றார் நமது பிரபலம். அந்த ட்விட்டர் பதிவு இதோ உங்களுக்காக...
சிரியாவில் என்ன தான் நடக்கிறது?...
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இதனால் அரசுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சண்டை கடந்த ஐந்து நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. அதாவது அரசு ஆதரவுப் படையினர் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எப்படியாவது கிழக்கு கௌடா பகுதியை திரும்ப கைப்பற்ற வேண்டும் என்ற முடிவோடு அரசுப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக சிரியா இராணுவம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை குறைந்தபட்சம் 416 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,100-க்கும் அதிகமானோர் படும் காயமடைந்துள்ளனர் என மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
விமான தாக்குதல் மூலம் 400,000 குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு டஜன் மருத்துவமனைகள் சீரழிந்து உள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை கூட செய்ய முடியவில்லை என தொண்டு மருத்துவகுழு கூறியுள்ளது.
உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் கிழக்கு கௌடா பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.
இன்னும் பலிகள் குறைந்தப்பாடில்லை, அந்த அப்பாவி மக்களை காக்க எந்த நாட்டினரும் அதிரடி முடிவு எடுப்தாற் போலும் தெரியவில்லை...