கற்பழிப்புக்கு ஆளான சிறுமிகளின் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது -SC
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!!
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!!
டெல்லி: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களையோ அல்லது வீடியோகளையோக்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது என டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், குறிப்பாக வடமாநிலங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகமாக ஆளாகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரின் புகைப்படங்களை ஊடகங்கள் பயன்படுத்தி வந்தது. இது போன்ற புகைப்படங்களை உபயோகித்தால் பார்ப்பவர்கள் மனக்கவலைக்கு உள்ளாவார்கள் என்ற எண்ணத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கிற்கு செவிசாய்த்த உச்சநீதிமன்றம், இதுகுறித்த வழக்கை இன்று விசாரணை செய்துள்ளது. அப்போது, பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்ளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருமாற்றம் செய்தோ அல்லது முகங்களை மங்கலாகவோ பயன்படுத்தக்கூடாது என உபயோகபடுத்தகூடாது என டெல்லி உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பீகாரில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் சில நேரங்களில் பாலியல் வல்லுனர்வுக்கு உற்படுத்தபடுவதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, பீகார் கவர்னர் சத்திய பால் மாலிக், அரசு மற்றும் மத்திய அரசுக்கு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து வீடுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.
அவரது கடிதத்தில், ஆளுநர் முசாபர்பூர் வீட்டில் தங்கி பாலியல் துஷ்பிரயோக வழக்கைக் குறிப்பிட்டு, பீகாரில் உள்ள அனைத்து குடியிருப்பு வீடுகளையும் கண்காணித்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான கோரிக்கையை கேட்டுக் கொண்டார். அதே உரிமையாளரான பிரிஜேஷ் தாகூர் நடத்திய இரு தங்குமிட இல்லங்கள் முசாபர்பூரில் ஸ்கேனரின் கீழ் வந்துள்ளன; குறைந்த பட்சம் 34 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, 11 பெண்களை காணவில்லை.