ராணூவத்தின் ஒவ்வொரு துறையும் நவீனமயமாக்கப்பட வேண்டும்!!
அடுத்தமுறை போரில் சொந்த நாட்டு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தளபதி தி ஜெனரல் பிபின் கூறியுள்ளார்.
ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆயுதப்படைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்றும் அடுத்தமுறை போரில் சொந்த நாட்டு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி போரிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கில் உரையாற்றிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:-
அரசாங்கமானது ஆயுதப் படைகளுக்கு தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
எதிர்கால போர்கள் மிகவும் கடினமாக சூழ்நிலையில் போராட வேண்டிய முறைகளில் உள்ளதால் நாம் நமது சேவை மற்றும் ஆயுதங்களை நவீனபடுத்த வேண்டும். நம் ஆயுதப் படைகள் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. எதிர்கால போர்கள் கடினமான சூழ்நிலையில் நடைபெறும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், வீரர்களுக்கு குறைந்த எடை கொண்ட குண்டு துளைக்காத(புல்லட் புரூஃப்) உடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இறக்குமதியை இந்தியா குறைக்க வேண்டும். உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த போராட வேண்டும் என்றார்.
"நாங்கள் படிப்படியாக இறக்குமதியிலிருந்து (பாதுகாப்பு தொழில்நுட்பத்தில்) விலகி செல்ல விரும்புகிறோம், ஏனெனில் நம் நாட்டை நேசிக்கிறோம். அடுத்துடன் போரில் நாம் உள்நாட்டு பாதுகப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.