மும்பை: இன்று மதியம் 12.40 மணிக்கு என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்கள். அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை. முதன் முதலில் என்.சி.பி தலைவர் ஷரத் பவார் பேசினார். அதன் பிறகு என்.சி.பி எம்.எல்.ஏ டாக்டர் ராஜேந்திர ஷிங்னே பேசினார். பின்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்பொழுது அவர் யாரும் எங்களை பின்வாங்க வைக்க முயற்சிக்கக்கூடாது என எச்சரிக்கும் வகையில் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், "ஜனநாயகம் என்ற பெயரில் குழந்தை விளையாடுவது நகைப்புக்குரியது. இதை ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும். ஹரியானாவிலும் பீகாரிலும் பாஜக செய்ததை செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.


அவர்கள் எதிர்ப்பையும் நண்பர்களையும் விரும்பவில்லை. அவர்கள் நாசீசிஸ்டிக். யாரும் எங்களை பின்வாங்க வைக்க முயற்சிக்கக்கூடாது என எச்சரிக்கும் வகையில் பேசினார் உத்தவ் தாக்கரே.


மேலும் பேசிய உத்தவ் தாக்கரே, இதை ஒரு "ஃபர்ஜிகல் ஸ்ட்ரைக்"(ஏமாற்றும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்) என்று கூறி, "நள்ளிரவில் சதிகளை செய்ய திட்டமிட வேண்டாம்" என்றார்.


முதலில் ஈ.வி.எம் மூலம் கேம் நடந்து கொண்டிருந்தது, இப்போது இது புதிய கேம் விளையாட ஆரம்பித்து உள்ளார்கள். இவர்கள் செய்வதை பார்த்தால் தேர்தல்கள் கூட தேவை என்று நான் நினைக்கவில்லை. துரோகம் மற்றும் பின்னால் இருந்து தாக்கும்போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார்.


அதேபோல என்.சி.பி தலைவர் ஷரத் பவார் கூறியது, 


அஜித் பவாரின் கீழ், சில என்சிபி எம்.எல்ஏ-வும் அங்கு சென்றிருந்ததை நான் அறிந்தேன். ஒரு நேர்மையான என்சிபி உறுப்பினர் ஒருபோதும் பாஜக அரசாங்கத்தை உருவாக்குவதில் ஒரு பகுதியாக இருக்க முடியாது. யார் சென்றார்கள், யார் செல்லப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. நான் அவர்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்- கட்சி தாவல் தடை சட்டம் உள்ளது, எனவே அவர்களின் முயற்சிகள் வீணாகிவிடும்" என்றார். 


மேலும் பேசிய அவர், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அரசாங்க அமையா வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் எனவும் கூறினார்.


நேற்று இரவு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி இடையேயான நீண்ட முத்தரப்பு சந்திப்புக்குப் பின்னர் சனிக்கிழமை இரவு மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணியின் முதல்வராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.


உத்தவ் தாக்கரே முதலமைச்சர் என்ற கொள்கையில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்து வைத்திருக்கிறோம்," என்று கூட்டத்தில் இருந்து வெளிவந்த பின்னர் என்சிபி தலைவர் சரத் பவார் கூறியிருந்தார்.


ஆனால், வியத்தகு விசியம் என்னவென்றால், ஒரே இரவில் திடிரென பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (NCP) ஒரு கூட்டணியை உருவாக்கியது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார், ஷரத் பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.