முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மருமகன் கைது
டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி : டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகாவும் அவரது கணவர் இம்ரானும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரிந்தனர். இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் லத்திகா, இம்ரான் மீது புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவிலிருந்த இம்ரானை டெல்லி போலீசார் கைது செய்தார்கள். இதற்காக 2 நாட்களுக்கு முன்னரே டெல்லி போலீசார் பெங்களூரு வந்து முகாமிட்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்களிருந்து தகவல் வந்தது.