மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக் குறித்தும், காங்கிரசின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டம், மோடி அலை உட்பட பல கேள்விகளை நிதி அமைச்சரிடம் எழுப்பினார். அதுக்குறித்து பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேள்வி: ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டம் 2019 தேர்தலில் மாற்றம் ஏற்ப்படுத்துமா?


பதில்: 1971-ல் இருந்து தற்போது வரை காங்கிரஸ் வறுமையை ஒழிப்போம் என்ற கோஷங்களை மட்டுமே கூறியுள்ளது. ஆனால் ஏழைகளுக்கு மோடி அரசு மட்டுமே வேலை செய்தது. கிராமத்தில் 91 சதவிகிதம் சாலையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. ஏழை சேவைக்கான பொருளாதார மாதிரியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நடுத்தர மக்களின் நலனுக்காக வருமான வரிகளை நாங்கள் குறைத்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை.


கேள்வி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் விவசாயிகளின் கடன்களை மன்னிக்க வேண்டி சூழ்நிலை இருந்ததா?


பதில்: எங்கள் அரசாங்கம் (பிஜேபி) வாக்குகளைப் பெரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகள் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர் காங்கிரஸ் கட்சி.


கேள்வி: நாட்டில் மத்திய அரசை ஆதரிக்காத ஒரு மாநிலம் இருக்கிறதா?


பதில்: மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத இரண்டு மாநிலங்கள் உள்ளன. ஒன்று மேற்கு வங்காளம் மற்றொன்று தில்லி.


கேள்வி: மக்களிடம் வைக்கப்படும் உங்களது முக்கிய வாதம் என்னவாக இருக்கும்? 


பதில்: மாற்றமே என்றாலே அது நரேந்திர மோடி தான். பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடிவுகளை சரியாக துணிந்து எடுக்க முடியும். வேறு பிரதம மந்திரி இருந்திருந்தால், 10 முறை விமானத் தாக்குதலைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்திருப்பார்.


கேள்வி: பாலகோட் மற்றும் விமானத் தாக்குதலை தேர்தலுக்கான பயன்படுத்தலாமா?


பதில்: பாலகோட் தாக்குதல் நடத்தியது புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்க அல்ல. ஆனால் நடப்பதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் எல்லை விதிகளை மீறுகிறது. பயங்கரவாதிகளின் வருகைக்காக நாங்கள் காத்திருக்க முடியாது. அதனால் தான் தீவிரவாதி முகாம்கள் அழிக்கப்பட்டன.


கேள்வி: பாலகோட் விமானத் தாக்குதல் தேர்தலில் பாஜகவுக்கு நன்மை கிடைக்குமா?


பதில்: தேர்தல் இல்லாயென்றாலும் இந்தியா புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்திருக்கும். அப்படி பார்த்தால் துல்லிய தாக்குதலின் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) போது தேர்தல் இல்லையே. இது தேர்தல் ஆதாயத்துக்காக நடத்தப்பட்டது அல்ல.


கேள்வி: மோடி அரசாங்கம் மீண்டும் அமையுமா?


பதில்: நாட்டு மக்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எங்களுடன் இருக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார்.


கேள்வி: சட்டபிரிவு 370 மற்றும் ராமர் கோயில் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?


பதில்: இது விவாதிக்க வேண்டிய பொருள் அல்ல. இதுக்குறித்து கருத்து கூறமுடியாது. இந்த இரண்டு விசியத்தையும் நாங்கள் நீதிமன்றத்தின் பக்கம் வைத்திருக்கிறோம்