மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee)  போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாக்கியது. அதன் எதிரொலியாக, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறையில் 11 பேர் கொல்லப்பட்ட தோடு, அங்கு பாஜக தொண்டர்களின் வீடு புகுந்து சூரையாடி வரும் சம்பவங்கள், வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. 


இதனால், அதிக அளவிலான பாஜக தொண்டர்கள், அஸ்ஸாமிற்கு தப்பி ஓடி வருகின்றனர். 
மேற்கு வங்காளத்திலிருந்து அஸ்ஸாமில் உள்ள துப்ரி மாவட்டத்திற்கு,  சுமார் 300-400 பேர் எல்லை தாண்டி நுழைந்ததாக  அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.



அவர்களுக்கு தங்க இடமும் உணவும் அளிக்க அஸ்சாம் பாஜக ஏற்பாடுகளை செய்துள்ளது. 



ALSO READ | TMC தொண்டர்களால் பற்றி எரியும் வங்காளம்; குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR