ஜார்கண்ட்: பட்டாசு ஆலையில் தீ விபத்து - 8 பலி, 25 காயம்!
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையத்தில் இன்று காலை வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
பட்டாசுகள் இருக்கும் பகுதியிலும் தீ பரவியதால் அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் வெடி குண்டுகள் வெடிப்பது போல இருந்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
கட்டுகடங்காமல் எரிந்த தீயை கடின முயற்சி எடுத்து தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 பேர் உடல் கருகி பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.