வடக்கு டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ளது. இங்கு அப்பொழுதும் மக்கள் கூட்டம் காணப்படும். சாந்தினி சவுக் அமைந்துள்ள நயா பஜாரில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இரண்டுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். 


தீபாவளி பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.