புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல விசியங்களை குறித்து பேசினார். ஜே.என்.யுவின் வன்முறை கும்பலையும் அவர் குறிவைத்தார். ஜெய்சங்கர் கூறுகையில், "நான் ஜே.என்.யுவில் படிக்கும் போது, ​​எந்தவிதமான வன்முறை கும்பலும் அங்கு இருந்ததில்லை" என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். பதான்கோட் தாக்குதல் நடந்தபோதும், யார் குற்றவாளி என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. யார் பாதிக்கப்பட்டர்கள், யார் குற்றவாளி என்பதில் இந்த அரசாங்கம் மிகத் தெளிவான பார்வையை வைத்திருக்கிறது என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, சீனா விவகாரம் குறித்தும் பேசினார். சீனாவை குறித்த எந்த விசியமாக இருந்தாகும், அதை நாம் கவனமாகவும் முறையாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். சீனாவின் முன்னோக்கைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள ஒரு தலைவர் மத்தியில் இருப்பது முக்கியம் என்றார். 


ஒரு சமூகத்தின் தற்போதைய பிரச்சினைகளை தீர்க்கமாக தீர்க்கும் மனப்பான்மை இல்லாவிட்டால், அது உலகில் அரங்கில் உயர முடியாது என்பதே சீனாவிலிருந்து வந்த பெரிய படிப்பினை என்று அவர் கூறினார். சீனா வளர்ச்சி சக்திக்கு தயாராக உள்ளது. நாமும் இதை செய்ய வேண்டும்..


இன்று நாம் என்ன செய்கிறோமோ, அதில் நிறைய பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. குடியுரிமை விஷயத்தைப் பாருங்கள், இது 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. சட்டப்பிரிவு 370 என்பது 70 ஆண்டுகள் நீடித்தது. மேலும் அயோத்தி பிரச்சினையையும் பாருங்கள். நமது நாட்டில் பல ஆண்டுகளாக தீர்வு காண முடியாமல் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு இன்று நாம் தீர்வுகண்டு வருகிறோம்.


உண்மையில் நம் நாடு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது போல, உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்திற்கு பலியாகவில்லை என்று அவர் கூறினார். மத்திய அரசு எடுத்து வரும் திட்டங்கள் பிரச்சினைகளை முற்றிலுமாக அகற்ற தான். அவை எதிர்காலத்திற்காக நல்லது என்றார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.