ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வந்த ஃபானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு  4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 


இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கக்கூடும். இதனால், மே 3, 4 தேதிகளில் ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.