தமிழக கலைஞர்களுடன் பேஸ்புக் கவர் படமாக்கிய ஜனாதிபதி
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
குடியரசு தினவிழாவில் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவு மற்றும் அலங்கார ஊர்தி, கலைநிகழ்ச்சி, ராணுவம், துணை ராணுவ பிரிவு, ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் 3-வது பரிசு தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தமிழக அலங்கார ஊர்தியில் வந்த கலைஞர்கள் தன்னுடன் எடுத்துக்கொண்ட படத்தை கவர் பிக்சராக வைத்து உள்ளார்.