புதிய IT விதிகளை ஏற்றுக் கொள்ள தயார் என்கிறது பேஸ்புக், டிவிட்டர் மவுனம்
இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் சுமார் 113.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர்,
இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் சுமார் 113.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர், OTT இயங்குதளங்களும் 29-30 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளன. டிஜிட்டல் மீடியா 700 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த விதிகளை பின்பற்றுவது தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவித்த புதிய விதிகள் 2021 மே 26, முதல் நடைமுறைக்கு வருகின்றன. சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், இந்தியாவில் அவை இயங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய விதிகளின் கீழ், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய அல்லது, தேச விரோத கருத்துக்கள் அல்லது போலி செய்திகளுக்கு. பதிவிட்ட நபர் மட்டுமல்லாது, அந்த சமூக ஊடக தளம் மீது வழக்கு பதியலாம். அதோடு, போலி செய்திகள் அல்லது நாட்டின் இறையாண்மை அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான தகவல்கள் பகிர்ந்த நபர் குறித்த தகவல்களை சமூக ஊடகம் அளிக்க வேண்டும்.
சமூக ஊடக தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை, கூ (Koo) தவிர உயர் சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் அரசின் புதிய விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள சமூக ஊடகம் தொடர்பான புதிய விதிகளை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதேசமயம் இது தொடர்பாக அரசுடன் சில அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால், டிவிட்டர் இந்த விஷயம் தொடர்பாக, கருத்து ஏதும் கூறாமல் மவுனமாக இருக்கிறது.
ALSO READ | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்
OTT தளங்கள், பேஸ்புக் (Facebook), வாட்ஸ் அப் (WhatsApp), டிவிட்டர் (Twitter), இன்ஸ்டடாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உள்ளடக்கங்கள் குறித்தும், அதன் மீது வைக்கப்படும் புகார்கள் குறித்து முடிவு எடுப்பதற்காக புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. மேலும், இந்த தளங்கள் "இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" பாதிக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான உள்ளடக்கத்தை, பதிவுகளை தடை செய்ய வேண்டும் எனவும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | "toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR