பாக்.தூதரக அதிகாரியிடம் போலி ஆதார் கார்டு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மெகமூத் அக்தர் இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதாக கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒருவாரமாக இருவரையும் உளவுத்துறை கண்காணித்து வந்தது. மெகமூத் அக்தருடன் ராஜஸ்தானை சேர்ந்த மவுலான ரம்ஸான், சுபாஷ் ஜாங்கிர் மற்றும் சோயிப் ஆகிய மூவரும் அடிக்கடி தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட பின்னர் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களை டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அவர்களிடமிருந்து இந்திய ராணுவம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தகவல் கிடைத்துள்ளது. இராணுவம் தகவல்களையும், ரசகியங்களையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் மெகமூத் அக்தர் பகிர்ந்து கொண்டது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. இதையடுத்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
மெகமூத் அக்தர் வெளிநாட்டு துதரக அதிகாரிக்கான சிறப்புச்சலுகை பெற்றிருந்ததால், விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தரிடம் போலி ஆதார் கார்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தூதரக அதிகாரிக்கு உடைந்தையாக இருந்த மவுலான ரம்ஸான், சுபாஷ் ஜாங்கிர் மற்றும் சோயிப் ஆகிய மூவரையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.