ஜந்தர் மந்தரில் `விவசாயிகள் நாடாளுமன்ற அமர்வை` நடத்தும் விவசாயிகள்!
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் (Delhi Lt Governor Anil Baijal) சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
புது டெல்லி: பாராளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200 விவசாயிகள் குழு இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் (Jantar Mantar) ஒன்றுக்கூடினர். அங்கு அவர்கள் "விவசாயிகள் நாடாளுமன்ற அமர்வு" என்ற கோசத்தை முன்னிறுத்தி மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய டெல்லியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் நடமாட்டம் மற்றும் சோதனை குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் (Delhi Lt Governor Anil Baijal) சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
சிங்கு எல்லையில் (Singhu border) தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகலிம் 200 பேர் அடையாள பேட்ஜ்கள் அணிந்து, தங்கள் தொழிற்சங்கங்களின் கொடிகளை ஏந்தி, போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலம் ஜந்தர் மந்தருக்கு வந்தடைந்தனர்.
போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கவிருந்தது, ஆனால் விவசாயிகள் மதியம் 12:25 மணிக்கு தான் அந்த இடத்தை அடைந்தனர்.
ALSO READ | Farmers Protest: 6 மாதங்களாய் தொடரும் விவசாயிகள் போராட்டத்தின் ‘கருப்பு நாள்’ இன்று
விவசாயி தலைவர் சிவ்குமார் கக்கா (Shiv Kumar Kakka) கூறுகையில், காவல்துறையினர் அவர்களை மூன்று இடங்களில் தடுத்து நிறுத்தியதாகவும், அவர்களின் ஆதார் அட்டைகள் சரிபார்க்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜந்தர் மந்தரை அடைந்ததும், விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர், இந்திய அரசாங்கம் மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டு, இருபுறமும் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.
டெல்லி காவல்துறையின் பல குழுக்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் சாலைகளை சோதனை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் சிறப்புப் பிரிவான ரேபிட் ஆக்சன் ஃபோர்ஸ் பணியாளர்கள், போராட்டம் நடைபெறும் இடத்தில் கவசங்களை அணிந்து, தடிகளுடன் காவல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்தின் வாயில்களில் நீர் பீரங்கி மற்றும் மெட்டல்-டிடெக்டர் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீரை ஏற்றிச் செல்லும் இரண்டு டேங்கர்களும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
ALSO READ | Red Fort வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாதாளத்தில் இருந்தாலும் தேடி பிடிப்போம்: Delhi Police
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் விவசாயிகள் சங்கங்களின் குடை அமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha), அனைத்து கோவிட் -19 விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும், அமைதியான முறையில் போராட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜந்தர் மந்தரில் தங்கள் எதிர்ப்பு ஆகஸ்ட் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு முடியும் வரை தொடரும் என்று எஸ்.கே.எம் கூறியிருந்தாலும், லெப்டினன்ட் கவர்னர் ஆகஸ்ட் 9 வரை மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளார்.
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தற்போது தேசிய தலைநகரில் போராட்டங்களுக்கு ஒன்றுகூட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிட் தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.
ALSO READ | ”இடத்தை காலி பண்ணுங்க”... தில்லி சிங்கு எல்லையில் போராடுபவர்களை விரட்டும் உள்ளூர் மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR