Farmers Protest: 6 மாதங்களாய் தொடரும் விவசாயிகள் போராட்டத்தின் ‘கருப்பு நாள்’ இன்று

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு பதவியேற்று ஏழாண்டுகள் ஆனதை முன்னிட்டு இன்று விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2021, 10:20 AM IST
  • 6 மாதங்களாய் தொடரும் விவசாயிகள் போராட்டம்
  • இன்று கருப்புநாளாக அனுசரிக்கப்படுகிறது
  • 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம்
Farmers Protest: 6 மாதங்களாய் தொடரும் விவசாயிகள் போராட்டத்தின் ‘கருப்பு நாள்’ இன்று title=

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 6 மாதங்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் தற்போது புது வடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர்.

மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் விவசாயிகள் 6 மாதங்களாக போராடி வருகின்றனர்.  

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு பதவியேற்று ஏழாண்டுகள் ஆனதை முன்னிட்டு இன்று விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விவசாயிகளின் கருப்புக் கொடி போராட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்து காணப்படுகிறது. 

Also Read | Cyclone Yaas: கரையை கடக்கும் சூறாவளி யாஸ்  மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

கடந்த 6 மாதங்களாக எந்தவொரு இடரையும் பொருட்படுத்தாமல், கொரோனா நோய் பரவலுக்கும் இடையில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. 

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக இருக்கும் நிலையில், கொரோனாவுக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சாபில் மே 28ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் சொந்த தொகுதியான பட்டியலாவில் மூன்று நாள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை விவசாயிகள் நடத்தக் கூடாது, போராட்டம் நடந்தால் கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று அமரிந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read | Buddha Purnima: இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 6 மாதங்களாக போராடும் விவசாயிகளின் கருப்புக் கொடி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கட்சியின் அலுவகங்களில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

Also | Ship fire off Colombo: சரக்குக் கப்பலின் தீயை அணைக்க 2 கப்பல்களை அனுப்பியது ICG

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News