புது டெல்லி: பல வித கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாநில விவசாயிகள் நேற்று தொடங்கிய பேரணி இன்றும் தொடர்கிறது. ‘டெல்லி சலோ’, அதாவது ‘டெல்லி செல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பேரணியில், சுமார் 200 விவசாய சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஏராளமான விவசாயிகளுக்கு பல மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்றுள்ளார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘டெல்லி சலோ’ பேரணியில் பங்கேற்றுள்ள விவசாயிகள், நேற்று இரவு பேரணியை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் டெல்லியை நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளார்கள். இதற்கிடையில் விவசாயிகளை தடுக்க, டெல்லி எல்லைகளில் பல வித தடுப்புகள் போடப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 


நேற்று எல்லையை கடக்க முயற்சித்த விவசாயிகள், இரவு நேரத்தில், தங்கள் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர். எனினும், இன்று காலை அது மீண்டும் தொடர்ந்தது. விவசாயிகள் தங்கள் முக்கிய கோரிக்கைகள் கொண்ட பட்டியலுடன் தலைநகரை அடைய டெல்லியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். எனினும், எல்லைப்பகுதிகளில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இன்று மீண்டும் தடுப்பணைகளை உடைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சத்தில், தடை உத்தரவுகள் போடப்பட்டு, அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக, நேற்று பல விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா எல்லையை கடக்க முயற்சிக்கையில், அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த காட்சிகள் 2020-21 விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் நினைவுபடுத்தின. 


டீசல், உணவுப்பொருட்கள் என தயாராக வரும் விவசாயிகள்


இதற்கிடையில் விவசாயிகள் உறுதியான எண்ணத்துடனும், பல வித ஏற்பாடுகளுடனும் தங்கள் பயணத்தை தொடக்கியுள்ளனர். டெல்லியை அடைய தேவையான டீசல் தங்கள் வாகனங்களில் இருப்பதாகவும், ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் தங்களுடன் எடுத்து வந்துள்ளதாகவும் பேரணியில் பங்கெடுத்துள்ள விவசாயிகள் கூறுகின்றனர். 


மேலும் படிக்க | Bharat Bandh: நாடு முழுவதும் பிப். 16 முழு அடைப்பு...? - அழைப்பு விடுத்த விவசாயிகள்!


விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?


பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், மூன்று முக்கிய கோரிக்கைகளில் இன்னும் எந்த நிலைப்பாடும் எட்டப்படவில்லை.


- பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (Minimum Support Price - MSP) ஒரு சட்டம்


- விவசாயக் கடன் தள்ளுபடி (Farmers Loan Waiver)


- சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல் 


இந்த கோரிக்கைகளை பற்றி இன்னும் பேசி அதற்கு தீர்வு காண மத்திய அரசாங்கம் (Central Government) நேற்று மேலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் இதற்கு பதிலளித்த விவசாயிகள் இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் அரசு தங்கள் நேரத்தை வீணடிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணமே அவர்களுக்கு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். 


இதற்கிடையில் விவசாயிகள் போராட்டம் அரசியல் சண்டைகளையும் தூண்டிவிட்டிருக்கின்றது. மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் இந்த போராட்டம் தொடர்பான எதிர் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதில் வெற்றி கண்டால், அவர்களை ஒரு விளையாட்டு அரங்கத்தில் தங்க வைக்கலாம் என்ற மத்திய அரசின் முன்மொழிவை அர்விந்த் கெஜ்ரிவால் அரசு மறுத்து விட்டது. எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள், டயர் டிஃப்ளேட்டர்கள் கொண்டு டெல்லி போலீசார் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து அப்பகுதிகளை பலப்படுத்தி உள்ளனர். 
  
விவசாயிகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதால் பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏற்பட கால அவகாசம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தெரிவித்தார். வன்முறை செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று விவசாயிகளை (Farmers) வற்புறுத்திக் கேட்டுக்கொண்ட அவர், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.


மேலும் படிக்க | தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டியது அவசியமா? காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ