Farmers Protest: கடந்த சில நாட்களாக சில முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மற்றும் பேரணியில் சில சமூக விரோத சக்திகளும் நுழைந்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அமைதியான முறையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறையை தூண்ட முயற்சிப்பது சரியல்ல என்றும், அப்படி செய்பவர்கள், அரசு சொத்துகளை நாசப்படுத்தி சேதப்படுத்தினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர வன்முறையில் ஈடுபடும் நபர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்த ஒரு நோட்டீசை வெளியிட்ட காவல்துறை இந்த தகவல்களை அளித்துள்ளது. விவசாயிகள் இயக்கத்தில் ஈடுபட்டு வந்த கெகெஎம் மற்றும் பிகெயு ஷஹீத் பகத் சிங் அமைப்பின் தலைவர் அமர்ஜித் மோஹ்ரியின் வீட்டிற்கு ஹரியானா மாநிலம் அம்பாலா காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


போராட்டம் நடத்தும் விவசாயிகள் தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாலா மாவட்டத்தில் உள்ள ஹரியானா காவல்துறை வியாழக்கிழமை கூறியது. விவசாயிகள் போராட்டத்தின் போது 1 விவசாயி உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. 


அமைதியான முறையில் போராடாமல் வன்முறையில் இறங்கும் விவசாயிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்பதை ஹரியானா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அமைதியான பேரணி வன்முறையாக மாறினால், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்கு குற்றவாளிகளின் சொத்துகளின் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என்று போலீஸார் தங்கள் நோட்டீஸில் தெரிவித்துள்ளனர். போராட்ட்டத்தின் போது ஏற்படக்கூடிய குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ஹரியானா காவல்துறை (Haryana Police) கூறியுள்ளது. 


மேலும் படிக்க | சீதாவும் வேண்டாம் அக்பரும் வேண்டாம்! சிங்கத்தின் பெயரை பெயரை மாத்துங்க! உத்தரவிட்ட நீதிபதி!


தடுப்புகளை அகற்றினால் நடவடிக்கை 


டில்லி சலோ பேரணியின் ஒரு பகுதியாக, டெல்லிக்குள் நுழைய, ஷம்பு எல்லையில் கட்டப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். இது தவிர அதிகாரிகள் மீது கற்களை வீசியும், பொதுமக்கள் மற்றும் அரசு உடைமைகளை நாசம் செய்தும் மர்ம நபர்கள் பொது அமைதியை கெடுத்து வருவதாக காவல்துறை கூறுகிது. பாதுகாப்பு தடுப்புகளை அகற்ற முயற்சித்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என அம்பாலா போலீசார் தெரிவித்துள்ளனர்.


வன்முறை மோதலில்  ஒரு விவசாயி உயிர் இழந்தார், 30 போலீசாருக்கு காயம்


முன்னதாக, புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் வன்முறையை தூண்ட முயற்சி செய்த நிலையில், அப்போது ஏற்பட்ட மோதலில் ஒரு இளம் விவசாயி பரிதாபமாக உயிர் இழந்தார், 30 போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து 2 நாட்களுக்கு போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என்றும் விவாயிகள் சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | Manipur: மணிப்பூர் வன்முறைக்கு காரணமான உத்தரவை திரும்ப பெற்ற உயர் நீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ