Farmers Protest: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த Supreme Court
Farmers Protest in Delhi: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
Farmers Protest in Delhi: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
விவசாய சீர்திருத்த சட்டங்களை (Farm Laws) நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) மத்திய அரசை கேட்டுக்கொண்டதோடு விசாரணையை ஒத்திவைத்தது. விவசாயிகளின் கோரிக்கையை தீர்க்க ஒரு குழுவை அமைக்க நீதிமன்றம் மீண்டும் பரிந்துரைத்தது.
இன்று நடந்த உரையாடல்:
இந்திய தலைமை நீதிபதி (CJI): டெல்லி எல்லையைத் தடுப்பது நகர மக்களுக்கு உணவு பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் (விவசாயி) கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். சாலைகளில் தடுத்து போராட்டம் நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்காது. புதிய விவசாய சட்டங்களின் செல்லுபடியாகும் குறித்து நாங்கள் இன்று முடிவு செய்ய மாட்டோம். ஜனநாயக முறைப்படி குடிமக்கள் கோரிக்கையின் படி தீர்ப்பு வழங்கப்படும்.
ஹரிஷ் சால்வே: விவசாயிகள் போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. டெல்லியில், பழங்கள் மற்றும் காய்கறிகள் பிற மாநிலங்களிலிருந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக அவற்றின் விலை அதிகரித்து வருகிறது.
நேற்று (புதன்கிழமை), உச்சநீதிமன்றம் (Supreme Court) விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகள் "இன்னும் செயல்படவில்லை" என்று கூறியதுடன், விவசாய குழுக்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒரு குழுவை உருவாக்குவது குறித்தும் கூறியிருந்தது.
இருப்பினும், இந்த ஆலோசனையில் விவசாய குழுக்கள் மகிழ்ச்சியடையவில்லை. இந்தநிலையில் விவாசய போராட்டத்திற்கு (Farmers Protest) எதிரான மனுக்கள் குறித்த இறுதித் தீர்ப்பு இன்று எதிர் பார்க்கப்பட்டது. இப்போது இந்த பிரச்சனையை தீர்க்கப்படாவிட்டால் விவசாயிகளின் கிளர்ச்சி விரைவில் ஒரு தேசிய பிரச்சினையாக மாறும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
ALSO READ | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்
இதற்கிடையில், ஒரு சீக்கிய போதகர் சிங், விவசாய போராட்டத்திற்கு ஆதரவு அளித்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி