வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

விவசாய சட்டங்களில் செய்யப்பட தேவையான திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,ஆனால் விவசாயிகள் தலைவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் இன்னும் வரவில்லை என்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 11, 2020, 04:25 PM IST
  • விவசாயிகள் போராட்டம் குறித்த வேளாண் அமைச்சரின் அறிக்கை
  • சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய அரசு தயாராக உள்ளது
  • விவசாயிகளிடமிருந்து எந்த ஆலோசனையும் இதுவரை வரவில்லை
வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர் title=

புதுடெல்லி: தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய அரசு விவசாயிகளுடன்  பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 

விவசாயிகள் போராட்டத்தை (Farmers Protest) முடிவுக்கு கொண்டு வர இது வரை நடத்திய ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) உடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் பலன் ஏதும் இல்லை.

வேளாண் அமைச்சருடன் உதேசிக்கப்பட்ட ஆறாவது சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்டனர். இதற்கிடையில், அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருகிறது

விவசாய சட்டங்களில் (Farm Laws) செய்யப்பட தேவையான திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார், ஆனால் விவசாயிகள் தலைவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் இன்னும் வரவில்லை. அவர்கள் ஆலோசனைகளை வழங்க தயாராக இல்லை என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது. ஆலோசனை வந்தவுடன் அதை பரிசீலிப்போம்.

விவசாயிகள் போராட்டத்தின் போது, ​​உழவர் அமைப்புகளுடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்ததாக வேளாண் அமைச்சர் தெரிவித்தார். இந்த கூட்டங்களில், விவசாயிகள் ஆட்சேபிக்கும் சட்டத்தின் விதிகள் குறித்து சொல்லுமாறு அரசு தொடர்ச்சியான கேள்விகளை வைத்தது. ஆனால் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் கூட அவர்களால் எந்த ஒரு ஆலோசனையும் வழங்க முடியவில்லை. அனைத்து சந்தேகங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசாங்கம் இன்னும் தயாராக உள்ளது.

ALSO READ | போராட்டத்தில் பங்கெடுக்க 1200 டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வரும் 50,000 விவசாயிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News