ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் இன்று முதல் பாஸ்ட் பூட்!
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டொமினோ பீட்சா, மெக்டோனால்ட் பர்கர்ஸ் உணவுகளை கிடைக்கும்.
இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கு டொமினோஸ், கேஎப்சி, மெக்டோனால்ட், சாகார் ரத்தா மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து உள்ளது.
இன்று முதல் ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில் பயணிகள் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை ஆன் - லைன் மூலல் ஆர்டர் செய்துக் கொள்ளலாம். செல்போன் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற நடவடிக்கையானது பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை கொடுக்கும்.
பயணிகள் தங்களுக்கு தேவையான உணவை சுமார் 2 மணி நேரங்களுக்கு முன்னாதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றார்.
> ஆன்-லைனில் ஆர்டர் கொடுக்கும் போது பயணிகள் www.ecatering.irctc.co.in. என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
> ரயில் நிலையத்தில் உணவு கிடைக்க வேண்டும் என தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பிஎன்ஆர் எண்ணையும் குறிப்பிடலாம்.
> எந்த நிறுவனத்திடம் இருந்து உணவு வேண்டும் என தேர்வு செய்யுங்கள். எந்த உணவு வேண்டும் என தேர்வு செய்யுங்கள்.
> உணவு ஆர்டர் செய்யப்பட்டதற்கு ஒடிபி வழங்கப்படும். ஒடிபி எண் மூலமாகவே பரிசோதனை செய்யப்படும்.
> செல்போனில் 1323 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து உங்களுடைய ஆர்டரை பதிவு செய்யலாம்.
> ஒடிபி எண் வழங்கப்படும்.
> உணவை வழங்கும் போது பணம் வாங்கிக்கொள்ளப்படும்.
> மீல் (‘MEAL’) என டைப் செய்து பிஎன்ஆர் எண்ணுடன் 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.
> வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியுடன் உங்களுடைய ஆர்டரை பதிவு செய்யலாம்.
> ஒடிபி வழியாக பரிசோதனை செய்யப்படும். உணவு டெலிவரி செய்யப்படும் போது பணம் வழங்க வேண்டும்.