Missing Pub-G? கவலை வேண்டாம்! அக்ஷய் குமாருடன் அதிரடியாக களமிறங்கவுள்ளது Fau-G!!
Pub-G விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பலர் துயரத்தில் இருந்தனர். எனினும், நாட்டின் நலனுக்காக இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகும் நிலையில் அவர்களை மகிழ்விகக் ஒரு நல்ல செய்து வந்துள்ளது.
புதுடெல்லி: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் (Akshay Kumar) வழிகாட்டுதலின் கீழ், FAU-G எனப்படும் மல்டிபிளேயர் ஆக்ஷன் கேம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிகர வருமானத்தில் 20 சதவிகிதம் 'பாரத் கே வீர் அறக்கட்டளை'க்கு நன்கொடையாக அளிக்கப்படும்.
‘பாரத் கே வீர் டிரஸ்ட்’ (Bharat Ke Veer Trust) இந்தியாவின் துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை மற்றும் ஆதரவை அளிக்கும் ஒரு தளமாகும்.
ஆத்ம நிர்பர் (Atma Nirbhar) இயக்கம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையையின் கீழ், பெங்களூரைச் (Bengaluru) சேர்ந்த கேமிங் வெளியீட்டாளர் விரைவில் “Fearless and United: Guards (FAU-G)” என்ற புதிய மல்டிபிளேயர் மிட் கோர் கேமிங் தலைப்பை அறிமுகப்படுத்தவுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார் கூறுகையில், “இந்தியாவில் இளைஞர்களுக்கு, கேமிங் பொழுதுபோக்கின் ஒரு முக்கிய வடிவமாக மாறி வருகிறது. FAU-G –யில் அவர்கள் விளையாடும் போது, அவர்கள் நம் வீரர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்வார்கள், மேலும் தியாகிகளின் குடும்பங்களுக்கும் தங்களாலான பங்களிப்பை கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதனுடன் பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பர் இந்தியாவுக்கான நோக்கத்தை பலப்படுத்தும் திறன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்திய பாதுகாப்புப் படைகள் எதிர்கொள்ளும் உண்மையான சூழல்களை அடிப்படையாகக் கொண்டது இந்த விளையாட்டு. இந்த விளையாட்டு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கால்வான் பள்ளத்தாக்கு பின்னணியில் அதன் முதல்-நிலை அமைக்கப்படும். அதன்பிறகு வரும் வெளியீடுகளில் மூன்றாம் நிலை ஷூட்டிங் விளையாட்டுகள் இருக்கும் என தெரிகிறது. இந்த விளையாட்டு கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) கிடைக்கும்.
கேமிங் வெளியீட்டாளரின் நிறுவனர் மற்றும் தலைவரான விஷால் கோண்டல் கூறுகையில், “பிரதமர் மோடியின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டை உலகின் முன் வைப்பது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயமாகும். இது, விளையாடுபவர்களுக்கு, ஒரு மெய்நிகர் அமைப்பில், தீய சக்திகளை எதிர்த்துப் போராட உதவுவதோடு, இதன் மூலம் வரும் வருவாயின் ஒரு பங்கு நம் நாட்டின் தியாகிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் மறைமுகமாக நாட்டு நலனிலும் பங்களிக்கிறார்கள்” என்றார்.
ALSO READ: PUBG தடை: இரண்டே நாளில் 2.5 லட்சம் கோடியை இழந்த டான்செண்ட் நிறுவனம்
இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தயானிதி எம்.ஜி மேலும் கூறுகையில், “வெவ்வேறு வகைகளில், குறிப்பாக மிட்-கோர் விளையாட்டுகளில் எங்களுக்கு ஆழமான அனுபவம் உள்ளது. உலகளாவிய பார்வையாளர்களுக்காக வைன்க்லோரி ஆஃப் சூப்பர் ஈவில் மெகாகார்ப் போன்ற வகை வரையறுக்கும் MOBA விளையாட்டுகளை நாங்கள் நிர்வகித்தோம். ரோவியோ போன்ற உலகளாவிய ஸ்டுடியோக்களுடன் நாங்கள் பணியாற்றியுள்ளோம். எங்களிடம் ஒரு அனுபவம் வாய்ந்த அணி உள்ளது. மேலும் சிறந்த திறமைகளை ஒன்றிணைக்க தொடர்ந்து விரிவடைந்து வருகிறோம். விளையாடும்போது இந்திய கேமர்கள் தங்களை தொடர்புபடுத்தக்கூடிய விளையாட்டுகளை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
‘Faugi’ என்றால் இந்தியில் ராணுவ வீரன் என்று பொருள். அவ்வகையில், இந்த விளையாட்டு இதை விளையாடும் இளைய சமூகத்திற்கு பொழுதுபோக்கிற்கான ஒரு சாதனமாக இருப்பதோடு நாட்டுப்பற்றையும் சேர்த்து வளர்த்தால், அது ஒரு மிகச் சிறந்த விஷயமாக இருக்கும்!!
ALSO READ: PUBG உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு: மத்திய அரசு