ராஞ்சி: ஜார்க்கண்டியில் ராஜேந்திரா மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ .1,350 தேவை ஆனால் 1,300 மட்டுமே சந்தோஷ் குமார்யிடம்  இருந்தது .அவருக்கு தேவையான ஐம்பது ரூபாய் நிதி பற்றாக்குறையால் தன்னுடைய  ஒரு வயது ஆண் குழந்தையின் உயிரை  பறி கொடுத்தார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையின் நடந்த கொடுமை : ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்த, சந்தோஷ் குமாரின், ஒரு வயது ஆண் குழந்தைக்கு, தலையில் காயம் ஏற்பட்டது. அங்குள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, ராஜேந்திரா மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக தன்னுடைய குழந்தையை அழைத்துச் சென்றார்.குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள்,  மருத்துவமனையில் உள்ள, ஸ்கேன் மையத்தில், 1,350 ரூபாய் செலுத்தி, 'சிடி' ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினர்


ஸ்கேன் மையத்திற்கு சென்ற சந்தோஷ் குமார், தன்னிடம், 1,300 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், மீதம், 50 ரூபாயை, சிறிது நேரத்திற்குள் செலுத்தி விடுவதாகவும் கூறினார். 'முழு தொகையையும் செலுத்தாமல், ஸ்கேன் எடுக்க முடியாது' என, ஸ்கேன் மைய ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் ஏற்பட்ட தாமதத்தால், சந்தோஷ் குமாரின் குழந்தை, பரிதாபமாக அதே இடத்தில் இறந்தது.


மனித நேயம் இறந்தால் ஒரு வயது குழந்தையின் உயிர் பறிபோனது