தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்  சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னிலை விவரங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், பல இடங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை வன்மையாகக் கண்டித்துள்ள தேர்தல் ஆணையம், தற்போது ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் உத்தரவை மீறி, தேர்தல் வெற்றிக்கான கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடுமாறும், இப்படி மக்கள் கூடி கொண்டாடும் பகுதிகளின் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 



அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் நடத்தும் கொண்டாட்டக் கூட்டங்கள் பற்றிய அறிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், எதிர்பார்க்கப்படும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக மக்கள் கூட்டமாக கூடிய நிகழ்வுகள் குறித்து தேர்தல் குழு தீவிரமாக கவனித்து வருகிறது என்றார். 


"இது தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யவும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓவை இடைநீக்கம் செய்யவும், இதுபோன்ற ஒவ்வொரு சம்பவம் தொடர்பான அறிக்கையை உடனடையாக சமர்ப்பிக்கவும் ஐந்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது" என்று தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறினார். கொரோனா தொற்று தீவிரமாக பரவிக்கொண்டிருப்பதால், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களையும் ஊர்வலங்களையும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தடை செய்திருந்தது. 


அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR