துப்பாக்கியுடன் TikTok வீடியோ பதிவு செய்ய முயன்ற போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன்களில் டாப் இடத்தில் இருப்பது டிக்-டாக் மற்றும் பப்ஜி. இந்த இரண்டும் அதிகமான எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இதற்கு சாட்சியாக பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. டெல்லியின் ஜப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவர் சல்மான், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவில் காரில் இந்தியா கேட் பகுதிக்குச் சென்றுள்ளார். 


அங்கு, டிக்-டாக் மூலம் துப்பாக்கியை வைத்து வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளனர். காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சல்மானின் கண்ணத்தில் நாட்டு துப்பாக்கியை மற்றொரு நண்பரான சொகைல் வைத்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.


அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில், சல்மான் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சல்மானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அங்கிருந்து நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து, தப்பி ஓடிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.