புதுடெல்லி: "மான் கி பாத்" என்னும் பிரபல வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை 11 மணி அளவில் உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருடத்தின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 


* 2017 அனைவருக்கும் ஒரு முழுமையான ஆண்டு இருக்க வேண்டும் , மேலும் நான் அனைத்து குடிமக்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி


* 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை வென்றுள்ளது, வெற்றி பெற்ற அனைத்து இளம் வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி


* பிரதமர் மோடி கிரிக்கெடடில் சாதனை படைத்த கருண் நாயர் மற்றும் அஸ்வினுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.


* நமது விளையாட்டு வீரர்கள் நம்மை பெருமை படுத்தி உள்ளார்கள்- பிரதமர் மோடி


* இவ்வாண்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். 


* டிசம்பர் 25 சுதந்திர போராட்ட தியாகியும், கல்வியாளருமான அலகாபாத்தை சேர்ந்த மதன் மோகன் மாலவியா பிறந்தநாளாகும்- மோடி


* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்ததினம். நாட்டின் வளர்ச்சியில் வாஜ்பாய் பங்களிப்பை தேசம் என்றும் மறக்காது- மோடி


* பணமில்லா பரிவர்த்தனையின் மீது ஆர்வம் அதிகரித்து உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து, ரொக்கம் இல்லா பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 


* ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களுக்காக ‘லக்கி கிரஹாக் யோஜனா’ வியாபாரிகளுக்காக ‘டிஜி-தன் வியாபாரி யோஜனா’ என்ற 2 பரிசு திட்டங்கள் இன்று அமலாகிறது.


*  இன்னும் சில நாட்டில் பணமில்லா பரிவர்த்தனை 200-300% உயர்ந்து உள்ளது. மெகா பரிசுகளும் உண்டு. அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஏப்ரல் 14-ம் தேதி அதற்கான குலுக்கல் நடைபெறும்.


* மின்னணு முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க மொத்தம் ரூ.340 கோடி பரிசு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் தலா ரூ.1,000 முதல் ரூ.1 கோடிவரை பரிசு கிடைக்கும், இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிவித்து உள்ளார்.