உ.பி., மணிப்பூரில் இறுதிகட்ட வாக்குப்பதிவு துவக்கம்
உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலுக்குகான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
மோடியின் வாரணாசி, பார்லி., தொகுதி மற்றும் காஜிப்பூர், ஜான்பூர் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிப்பூரில் 1151 வாக்குச்சாவடி மையங்களும், உ.பியில் 14,458 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், உ.பி.யின் ஆலாப்பூர் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததையடுத்து அத்தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப், மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் வருகிற 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.