கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர நிதியாக கூடுதலாக ரூ.30,000 கோடி வெளியிடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நடவடிக்கை மூன்று கோடி விவசாயிகளுக்கு உதவும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.20 லட்சம் கோடி ஊக்கத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது அறுவடைக்கு பிந்தைய ரபி பயிர்களில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


மேலும் இந்த நிதி விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் வழங்கும் நபார்ட் (வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி) வழங்கிய ரூ.90,000 கோடி ஆதரவுக்கு கூடுதலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இத்துடன் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் 29.5 கோடி விவசாயிகளுக்கு ரூ .2 லட்சம் கோடி சலுகை கடன் ஊக்கத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் பிரதமர்-கிசான் பயனாளிகளுக்கு சலுகை கடன் வழங்க சிறப்பு இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள விவசாயிகளும் இந்த உந்துதலில் சேர்க்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


கிராமப்புற உள்கட்டமைப்பிற்காக 2020 மார்ச் மாதத்தில் மாநிலங்களுக்கு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடியின் ஆதரவு வழங்கப்படும். மார்ச் 2020 முதல் மாநில அரசு உரிமைகளுக்கு விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கு ரூ.6,700 கோடியின் மூலதன வரம்பினையும் அவர் அறிவித்துள்ளார்.


நிதியமைச்சரின் இரண்டாவது தவணை திட்டங்கள் கீழ்காணும் 9 படிகளின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.


- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3
- சிறு விவசாயிகளுக்கு 2
- முத்ராவுக்குள் ஷிஷு கடனுக்கு 1
- தெரு விற்பனையாளர்களுக்கு 1
- வீட்டுவசதிக்கு 1
- 1 பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு