மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாயகம் திரும்பினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக பழுது காரணமாக கடந்த ஆண்டு டெல்லி AIIMS மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 


இதனையடுத்து ரெயில்வேத் துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின்னர், உடல்நிலை சீரானதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.



இதனையடுத்து கடந்த மாதம் 15-ஆம் தேதி மருத்துவ மேல்சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார். அவர் எப்போது இந்தியா திரும்புவார்? என்பது பற்றிய விபரம் வெளிவராத நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அவருக்கு பதிலாக இடைக்கால நிதி மந்திரி புயுஷ் கோயல் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில், இன்று விமானம் மூலம் அருண் ஜெட்லி டெல்லி திரும்பினார். இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.