ரஃபேல் ஒப்பந்தத்தை கைவிடும் திட்டம் இல்லை - அருண் ஜேட்லி!
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்!
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்!
ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... "இந்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் 'டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அரசு தனிப்பட்டமுறையில் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னதாக பிரான்ஸ் அரசு வெளியிட்ட விளக்க அறிக்கையில் "இந்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே டஸால்ட் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் மறைந்திருக்கும் மர்மம் குறித்து மோடி வாய் திறக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ANI செய்தி நிறுவனத்திற்கு ப்ரத்தியேக பேட்டி அளித்துள்ளார். இந்த நிகழ்வின் போது ரஃபேல் ஒப்பதம் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது...
"ரஃபேல் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுவதுமாக நிராகரிக்கின்றேன். ரஃபேல் விமானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டனவா என்பதை மத்திய தலைமை தணிக்கையாளர் ஆய்வறிக்கை தெரியபடுத்தும்.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் நாள் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் குண்டு ஒன்று வெடிக்கும் என தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக தான் தற்போது பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே ரஃபேல் விவகாரம் குறித்து அதிர்வலைகளை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளின் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஒரே குரலில் பேசியுள்ளனர். இந்த விவகாரத்தினை தற்செயலான நிகழ்வாக கருத இயலாது.
ராணு வீரர்களின் பெருமிதமாக கருதப்படும் துல்லியத் தாக்குதல் என்ற வார்த்தையை, ராகுல் காந்தி தரக்குறைவான வகையில் பயன்படுத்தி இருப்பது நாட்டையே அவமதிக்கும் செயல்.
ரஃபேல் ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், எனவே இத்திட்டம் ஒருபோதும் ரத்து செய்ய இயலாது" என தெரிவித்துள்ளார்!