புதுடில்லி: வருமான வரியை தாக்கல் செய்தவற்கான இணைய தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர்டலை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்திற்கு நிதி அமைச்சகம் "சம்மன்" அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐடி போர்டல் குறைபாடுகளை தீர்க்காதது குறித்து விளக்கமளிக்க வேண்டும் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.


இதுகுறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "வருமான வரி இணையதளம் முறையாக தொடங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் புதிய இணைய தளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் தீர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சரிடம் விளக்கமளிக்க இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



வருமான வரி தாக்கல் செய்வதற்காக புதிய இணையதள பக்கம் கடந்த ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. நிதி அமைச்சகத்தில், அமைச்சர் நிர்மலா சீதாரமனை நேரில் சந்தித்து வருமான வரி போர்டல் தொடர்பாக இன்போசிஸ் சார்பில் விளக்கம் அளித்த பிறகு எதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரியவில்லை.


இந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் (21/08/2021) வருமான வரித்துறையின் இணையதளம் இயங்கவில்லை. இதனால் வருமான வரி தாக்கல் செய்யும் மக்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.


வருமான வரித்துறைகான இணையதள போர்ட்டலை உருவாக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு 164.5 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு செலுத்தியுள்ளது.  ஆனால் அடிக்கடி இந்த போர்ட்டலில் கோளாறுகள் ஏற்படுவது அனைவருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தியிருக்கிறது.


READ ALSO | Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!


தற்போது மீண்டும் வருமான வரியை தாக்கல் செய்தவற்கான இணைய தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், இன்போசிஸின் தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.


வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள்,  தனிநபர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியது.


ரீபண்ட் விரைவில் கிடைக்க செய்தல், வருமான வரி கணக்கு தொடர்பான மேல்முறையீடு, அபராதம், வரி மதிப்பீடு போன்றவை தொடர்பாக, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிசீலனை செய்ய ஏதுவாக, நவீன முறையில் புதிய இணையதளம் (New Website) வடிவமைக்கப்பட்டது.  ஆனால் அதில் இன்னும் சில கோளாறுகள் தொடர்கின்றன.


ALSO READ | உதவிக்கரம் நீள்கிறது; இனி வருமான வரி செலுத்த கவலைப்பட வேண்டாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR